வியாபாரிகளுக்கு மானிய விலையில் தள்ளுவண்டிகள்
- 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள்
- தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில்
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் குளித்தலை மற்றும் தோகைமலை பகுதியில் உள்ள சிறு வியாபாரிகள் 19 பேர்களுக்கு 15 ஆயிரம் மானிய விலையில் தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குளித்தலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் லலிதா தலைமை வகித்தார், குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காய்கறி கனி 19 தள்ளு வண்டிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான விதைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார், நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சச்சின்ராம், தகவல் தொழில்நுட்பம் அமுல்ராஜ், ஒன்றிய கழக நிர்வாகி பரளி குமார், ஜோதிவேல், கிளை செயலாளர் அருணாச்சலம், ராஜேந்திரம் கோபால், மேல தண்ணீர்பள்ளி கிளை செயலாளர் ஸ்டாலின் விக்னேஸ்வரன், மாணவரணி லோகேஸ்வரன், ஒன்றிய கழக நிர்வாகி ஜெகநாதன், பொறியாளர் அணி ஹரிஹரன், மேட்டுமருதூர் ஆறுபாஸ்கர், கழக நிர்வாகிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகிகள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.