உள்ளூர் செய்திகள்

கரூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரில் கருத்தரங்கு

Published On 2023-09-15 07:14 GMT   |   Update On 2023-09-15 07:14 GMT
  • மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்
  • கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேலாயுதம்பாளையம்  

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் உடன் இணைந்து ஒரு நாள் ஆய்வு கருத்தரங்கை கல்லூரி கலையரங்கில் நடத்தினார்கள்.

மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வியாபார யுக்திகளை மேம்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கு அமைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினர்.

கல்லூரியின் வணிகக் கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் கன்னியம்மாள் வரவேற்புரை வழங்கினார், துணை முதல்வர் முனைவர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார்.

வணிகவியல் துறை தலைவர் யமுனா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். வணிகத் தொழிற்சார் கணக்கியல் துறை தலைவர் சுதா நன்றியுரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News