உள்ளூர் செய்திகள்

குகைவழிப்பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-10-24 12:02 IST   |   Update On 2023-10-24 12:02:00 IST
  • தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில்குகைவழிப்பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
  • தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் வழியாக கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்டர் மீடியாவை இடித்து அந்த வழியாக அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள் ,லாரிகள் , கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன் காரணமாக தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்டர் மீடியா உடைக்கப்பட்டு அந்த வழியாக சென்ற பாதை அனைத்தும் நெடுகிலும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்து விட்டனர். அதனால் அந்த வழியாக எந்த வாகனமும் , பொதுமக்களும் செல்ல முடியாது .அதே போல் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .இதனால் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று மீண்டும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், அக்ரஹாரம், கட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமச் சேர்ந்த பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர். அதன் காரணமாக தவுட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குகை வழி பாதை அமைத்து தருமாறு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியதில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர் .ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ளவில்லை. எனவே விரைந்து தவிட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குகைவழிப்பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News