உள்ளூர் செய்திகள்

வாக்காளர் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-11-03 12:17 IST   |   Update On 2023-11-03 12:17:00 IST
  • கரூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வாக்காளர் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் முகவரி மாற்றம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ரதிதேவி வரவேற்றார்.முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக மண்மங்கலம் தாலுக்கா அலுவலக தனித்துணை வட்டாட்சியர் விஜயகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் மணிவண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர்நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான விவரங்களை படிவம்-6 -ன் மூலமாக விவரமாக எடுத்து கூறினார்கள். முகாமிற்காண ஏற்பாடுகளை கல்லூரியின் தேர்தல் பொறுப்பாளர் சம்பத்குமார் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News