உள்ளூர் செய்திகள்

கள் விற்ற முதியவர் கைது

Published On 2023-10-27 11:56 IST   |   Update On 2023-10-27 11:56:00 IST
  • க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரத்தில் கள் விற்ற முதியவர் கைது
  • பழனிச்சாமி (வயது 60) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கரூர்,  

க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் சுற்றுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி கள் இறக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த தும்பிவாடி ஊராட்சி வெள் ளரிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 60) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News