கடை-வீடுகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம் ஆத்தூர் பிரிவு அருகே பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது மலையம்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (56), பெட்டி கடைக்குள் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் தவுட்டுப்பாளையம் அருகே கட்டிபாளையம் பகுதியில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த ரத்தினவேல் (65) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்ததாக பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.