உள்ளூர் செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- க.பரமத்தி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48) இவர், அதே பகுதியில் உள்ள, முத்து காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த, 7 -ந்தேதி மாலை பூஜை முடிந்த பிறகு, கோவிலை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார்.
மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற போது, கதவு திறக்கப்பட்டிருந்தது.மேலும், உண்டியலில் இருந்த, 20 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து, ரவிச்சந்திரன் கொடுத்த புகார் படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.