உள்ளூர் செய்திகள்

கிறிஸ்தவ மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-27 11:36 IST   |   Update On 2023-10-27 11:36:00 IST
கரூரில்கிறிஸ்தவ மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், 

இஸ்ரேல் நாட்டில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தீவிரவாத தாக்குதலை கண்டித்தும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின் தலைமையில் கரூர் கடைவீதி அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் இயக்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மாருதி, துணைத் தலைவர் யோகராஜ், மாநில மகளிர் அணி தலைவி நகோமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் அகஸ்டின், இஸ்ரேலில் யூதர்கள் போரினால் அநியாயமாக கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த கொடூர போர் தாக்குதல் சம்பவத்திற்கு மறைமுகமாக இந்தியாவில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் எதிர்வரும் அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை கிறிஸ்தவ மக்கள் புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்வார்கள் .

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதை வரவேற்கிறோம். பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News