உள்ளூர் செய்திகள்
கரூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
- கரூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
கரூர்:
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு ெரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்புற பகுதியில் சாலையோரம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கரூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 31) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.