உள்ளூர் செய்திகள்

கரூர் வள்ளுவர் அறிவியல்-மேலாண்மை கல்லூரியில் யோகா தின விழா கொண்டாட்டம்

Published On 2023-06-23 13:26 IST   |   Update On 2023-06-23 13:26:00 IST
  • கரூர் வள்ளுவர் அறிவியல்-மேலாண்மை கல்லூரியில் யோகா தின விழா கொண்டாட்டபட்டது
  • நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 482 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியும் ஈஷா யோகா அறக்கட்டளையுடன் இணைந்து நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான யோகா என்னும் தலைப்பில் சிறப்ப கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் இருளப்பன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் ஹேமலதா செங்குட்டுவன் தலைமை தாங்கி, யோகாசனம் செய்வதன் மூலம் மனதை தெளிவுபடுத்துவது மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கரூர் ஈஷா அறக்கட்டளையின் மாஷீமா பங்கேற்று மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் கற்றுக் கொடுத்து யோகாவின் நன்மைகள் மற்றும் மன அழுத்தத்தைப் போக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும். மக்களிடையே ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், யோகாவின் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு கற்பித்தார். ஒருவரின் வாழ்க்கையிலும், வெற்றியிலும் யோகா எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் அவர் விவரித்தார்.

தனது யோகா பற்றிய அறிவை காணொளி காட்சி மூலமாகவும், மாணவர்களால் செய்யப்பட் யோகாசனங்கள் மூலமாகவும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் இறுதியில் சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு தினசரி யோகா மற்றும் தியானத்திற்கான சில குறிப்புகளை வழங்கினார். இது படிப்பில் கவனம் செலுத்த உதவும் என்றும் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 482 மாணவர்கள் கலந்து கொண்டனர். நவநாகரீக ஆடை வடிவமைப்பு துறைத்தலைவர் தலைவர் நதியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News