உள்ளூர் செய்திகள்
குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் யோகா விழிப்புணர்வு பயிற்சி
- குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தலைமையில் யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது
- யோகா பயிற்சியை பயிற்சியாளர் முருகன் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்.
குளித்தலை,
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சார்பு நீதிபதி சண்முகக்கனி தலைமையில் யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் நீதிபதிகள் பிரகதீஸ்வரன், பாலமுருகன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல்ஹமீது, வழக்கறிஞர் சங்க செயலாளர் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் நாகராஜன், மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். யோகா பயிற்சியை பயிற்சியாளர் முருகன் அனைவருக்கும் பயிற்சி அளித்தார்.