உள்ளூர் செய்திகள்

மது விற்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது

Published On 2023-08-17 14:14 IST   |   Update On 2023-08-17 14:14:00 IST
  • க.பரமத்தி பகுதியில் மது விற்ற பெண் உள்ளிட்ட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்
  • ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கரூர்,

க.பரமத்தியை அடுத்த சின்னதா ராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன் பேரில் சின்னதாராபுரம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் தன்னாசியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரெட்டி மகன் தண்டபாணி (வயது 53) என்பவர் வீட்டின் அருகே முள்காட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது கண்டறியப்பட்டது. இதேபோல் சின்னதாராபுரத்தை அடுத்த பனையம்பாளையம் அருகே அம்பேத்கர் காலனி பகுதியில் நடத் திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி சக்தி மகேஸ்வரி (38), மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது கண்டறியப்பட்டது. இரு வரிடமிருந்தும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவ ரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News