உள்ளூர் செய்திகள்

மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-09-01 13:14 IST   |   Update On 2022-09-01 13:14:00 IST
  • மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டான்.
  • மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

கரூர்:

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி ஊராட்சி மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 45). இவரது மனைவி செல்வி (30). இந்த தம்பதியின் மகன் நித்திஷ் (13). இவன் திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி அதே பகுதி கொண்டமநாயக்கன்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் குல தெய்வ கோவில் திருவிழாவிற்காக மருதம்பட்டி காலனியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து நித்திஷ் தங்கியிருந்தான்.

இந்தநிலையில் தனது தாய், தந்தையிடம் தனக்கு புதிதாக செல்போன் வேண்டும் என்று கேட்டு நித்திஷ் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு தற்போது தங்களிடம் பணம் இல்லை என்றும், பின்னர் வாங்கி தருகிறோம் என்றும் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் சமாதானம் அடையாத நிதீஷ் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில சம்பவத்தன்று காலையில் நித்திஷ் வீட்டின் சமையலறை விட்டத்து கம்பியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News