உள்ளூர் செய்திகள்

டிப்பருடன் டிராக்டர் பறிமுதல்

Published On 2023-07-10 14:19 IST   |   Update On 2023-07-10 14:19:00 IST
  • செம்மண் கடத்திய டிராக்டர் டிப்பருடன் பறிமுதல் செய்யப்பட்டது
  • தப்பி ஓடிய டிரைவரை விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

கரூர்,

குளித்தலை அடுத்த, ஆதனுார் பஞ்.,சென்னம்பட்டி பகுதியில் கிராவல் மண், காட்டாற்று மணல், செம்மண் கடத்துவதாக சிந்தாமணிப்பட்டி எஸ்.ஐ., கனகராஜூக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி சென்னம்பட்டி குளத்தில் சோதனையில் ஈடுபட்ட போது, ஒரு யூனிட் செம்மண்ணை டிராக்டர் டிப்பருடன் கடத்திச் சென்றது தெரியவந்தது.வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது, டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார். சிந்தாமணிப்பட்டி போலீசார் விரட்டி பிடித்து, டிரைவர்செ ன்னம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News