உள்ளூர் செய்திகள்

கரூரில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

Published On 2023-02-25 08:13 GMT   |   Update On 2023-02-25 08:13 GMT
  • கரூரில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யபட்டார்
  • கரூர் கலெக்டர் பிரபுசங்கர் துரை சாமியை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

கரூர்

குளித்தலை அடுத்த நெய்தலுார் காலனி சின்ன கவுண்டம்ப ட்டியைசேர்ந்தவர் முத்தையா மகன் ராஜேஷ் (வயது 30). இன்ஜினியர். கடந்த 10 ஆண்டுகளாக கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த அவர் கிராமத்தில் உறவினர்களோடு பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக பைக்கில் நான்கு வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை ராஜேஷ் மற்றும் உறவினர்கள் விசாரித்தனர். அப்போது வாய்தகராறு ஏற்பட்டது. மர்ம நபர்கள் அவர்களை ஆயுதத்தால் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில்குளித்தலை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிந்து ஸ்ரீரங்கம் தாலுகா புலிவலம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (எ) துரைசாமி, சேப்பலாபட்டியை சேர்ந்த லட்சுமணன், நெய்தலுார் காலனி கந்தன் (எ) விக்கி, அதே பகுதியை சேர்ந்த மணிவேல் ஆகியோர் மீது வழக்கு பதிந்து ரவுடி துரைசாமியை தவிர மற்றவர்களை கைது செய்தனர். பின்னர் தலைமறைவான துரைசாமியை தேடி கைது செய்தனர். துரைசாமி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கரூர் எஸ்பி சுந்தரவதனம் பரிந்துரைத்தார். அதன் பேரில் கரூர் கலெக்டர் பிரபுசங்கர் துரை சாமியை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து குளித்தலை போலீசார் துரைசாமியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Tags:    

Similar News