உள்ளூர் செய்திகள்

10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா

Published On 2023-10-15 07:32 GMT   |   Update On 2023-10-15 07:32 GMT
  • குளித்தலை அருகே நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது
  • இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

 குளித்தலை,

கரூர் மாவட்டம், குளி த்தலை சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட பகுதி களில் சுற்றுச்சூழல் மற்றும் காலநி லையை பாதுகா க்கின்ற வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை சேமித்து வைக்கின்ற மரங்களில் முக்கிய மானதாக விளங்கு கின்ற பனைமரத்தை நடுகி ன்ற முயற்சியில் விதைகள் அறக்கட்டளை மூலம் தாளியாம்பட்டி குளம் பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றா ண்டு விழாவையொ ட்டியும், தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் விதைகள் அறக்க ட்டளை, காருண்யா பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவ, மாணவி கள், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி சமூக பணித்துறை மாணவ, மாணவிகள் இணைந்து 10,000 பனை விதை நடும் நிகழ்ச்சி குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையேற்று, பனை விதையை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் விதைகள் அறக்கட்டளை நிறுவன இயக்குனர் ஜெயந்தி வரவேற்றார், விதைகள் அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்துரு நிகழ்ச்சி குறித்து வாழ்த்துரை வழங்கினார், வைகைநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி கோ பால் சிறப்புரையாற்றினார், தேசிய சமூக குடிமை பணி பொறுப்பாளர் பிரபாகரன் பனை விதை நடவு குறித்த உறுதிமொழி வாசித்தார், முசிறி அரசு கலைக்கல்லூரி சமூக பணித்துறை பேராசி ரியர் மார்சல் நன்றியு ரையாற்றினார்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு தாளியா ம்பட்டி குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனை விதைகளை நட்டனர். இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News