உள்ளூர் செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

Published On 2023-11-14 09:37 IST   |   Update On 2023-11-14 09:37:00 IST
  • கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலியானார்
  • அடையாளம் தெரியாத கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்,

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணி பாளையம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 62). இவரது மகன் பழனிச்சாமி ( வயது 26). இவர் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பழனிச்சாமி பெட்ரோல் பங்கில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் பழனிச்சாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனிச்சாமியை ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பழனிசாமி ஏற்கனவே வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பழனிச்சாமியின் தந்தை மாரிமுத்து வேலாயுதம்பா ளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தார். அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News