உள்ளூர் செய்திகள்
மதுபாட்டில்களை பதுக்கி விற்ற முதியவர் கைது
- தோகைமலை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்
- விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்
கரூர்,
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புத்தூர் ஊராட்சி, வேங்கடத்தாம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 70). இவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார், அங்கு சென்று சோதனை செய்தனர். இதில், பொன்னுச்சாமி விற்பனைக் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.