உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-06-12 13:39 IST   |   Update On 2023-06-12 13:39:00 IST
  • 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, வளர்மதி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டம், குளித்தலை காமராஜர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். வக்கீல். இவரது மனைவி வளர்மதி (வயது 33). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார். இதன் காரணமாக வளர்மதிக்கு தனது வீட்டில் இருக்க பிடிக்கவில்லையாம். மேலும் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் 2 குழந்தைகளுடன் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வளர்மதி தனது குழந்தைகளின் துணிகளை எடுத்து வருவதாக கூறி குளித்தலைக்கு வந்துள்ளார். தனது வீட்டிற்கு வந்த வளர்மதி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வளர்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, வளர்மதி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News