உள்ளூர் செய்திகள்

கரூரில் மிதமான மழை

Published On 2023-03-20 08:02 GMT   |   Update On 2023-03-20 08:02 GMT
  • வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
  • அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 16.2 செ.மீ. மழை பதிவு

கரூர்,

குளித்தலை மற்றும் தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில், நேற்று திடீரென மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி, தமிழகத்தின் நிலப்பரப்புக்கு மேல் நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 17ல் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட் டத்தில் நேற்று மாலை, குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, நச்சலுார், நங்கவரம், பொய்யாமணி, பணிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கரூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் மழைத்தூறல் இருந்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், நேற்று மாலை, திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அரவக்கு றிச்சி, 16.2 மி.மீ., அணைப்பாளையம், 9.4 மி.மீ., க.பரமத்தி, 1.8 மி.மீ., ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 2.28 மி.மீ., மழை பதிவானது.




Tags:    

Similar News