உள்ளூர் செய்திகள்
- தவுட்டுப்பாளையம் நர்சிங் கல்லூரி மாணவி மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி கல்யாணி (35). இவர்களது மகள் ஹர்சினி(17). இவர் புன்னம் சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதாக ஹர்சினி வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் ஹர்சினி வீடு திரும்பவில்லை.
பெற்றோர்கள் கல்லூரிக்குச் சென்று விசாரித்த போது ஹர்சினி கல்லூரிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். பல இடங்களிலும் தேடி கிடைக்காததால், இது குறித்து வர்சினியின் தாய் கல்யாணி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.