உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் லேப்டாப் பறித்தவர் கைது

Published On 2023-10-30 10:05 IST   |   Update On 2023-10-30 10:05:00 IST
  • கரூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் லேப்டாப் பறித்தவர் கைது செய்யப்பட்டார்
  • பொதுமக்கள் மடக்கி பிடித்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கரூர்,

திருப்பூர் மாவட்டம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா (வயது 29). இவர், கரூர் வந்து விட்டு, திரும்பவும் திருப்பூர் செல்வதற்காக பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது, அவர் அருகே வந்த அடை யாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென கிறிஸ்டினா வைத்திருந்த லேப்டாப்பை பறித்துக் கொண்டு, பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். இதனை பார்த்த கிறிஸ்டினா சத்தம் போடவும், பஸ்சில் இருந்த பொதுமக்கள், நபரை மடக்கி பிடித்து டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். டவுன் போலீசார், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியை சேர்ந்த பூபாலகிருஷ்ணன் ( 28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நபரிடம் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார், பூபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News