உள்ளூர் செய்திகள்

கால்நடை நோய் தடுப்பூசி முகாம்

Published On 2023-10-29 12:52 IST   |   Update On 2023-10-29 12:52:00 IST
  • நொய்யல் பகுதிகளில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
  • விவசாயிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தினர்

 கரூர்,

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நொய்யல் அருகே மரவாபாளையம்,காந்தி நகர், சேமங்கி,முத்தனூர்,கவுண்டன் புதூர், வடிவேல் நகர்,செட்டிதோட்டம்,செல்வநகர்,வெள்ளக்கல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

முகாமில் நொய்யல் கால்நடை மருந்தக மருத்துவர் உஷா தலைமையில் 4 கால்நடை ஆய்வாளர்கள், 4 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு முகாமிற்கு கொண்டுவரப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்து ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News