உள்ளூர் செய்திகள்

கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு அவசரகால மீட்பு நடவடிக்கை விழிப்புணர்வு

Published On 2022-12-29 13:36 IST   |   Update On 2022-12-29 13:36:00 IST
  • கரூர் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பில் செயல்விளக்கம் அளிக்கபட்டது
  • கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான குழுவி–னரால் இந்த விழிப்புணர்வு செய்து காண்பிக்கப்பட்டது

கரூர்:

கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை மற்றும் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் சாரண, சாரணியர் மற்றும் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பரணி பார்க் சாரணர் திடலில் தீயணைப்பு மீட்புப் பணித்துறை கரூர் மாவட்ட அலுவலர் ஜெகதீஸ் உத்தரவுப்படி கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான குழுவி–னரால் இந்த விழிப்புணர்வு செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பரணி பார்க் சாரண, சாரணியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தீ தடுப்பு மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கை விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கத்தை கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை குழுவிடமிருந்து கற்றுக் கொண்டனர். பரணி பார்க் கல்விக் குழும தாளாளரும், பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவருமான மோகன–ரங்கன், கரூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் செல்வக்குமார், பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரங்கன், சுபாஷினி, பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வ––ரும், தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணை–யருமான முனைவர் ராம–சுப்பிரமணியன், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News