உள்ளூர் செய்திகள்

சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

Published On 2023-06-30 13:35 IST   |   Update On 2023-06-30 13:35:00 IST
  • சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.2.50 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது
  • கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

கரூர்,

கரூர் மாவட்டம் நொய்யல் அருகில் உள்ள சாலைப்புதுாரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறும். கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 36.61 குவிண்டால் எடை கொண்ட 106 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. கிலோ அதிகபட்சம் ரூ.76.30-க்கும், குறைந்தபட்சம் ரூ.65.19-க்கும் சராசரியாக ரூ.71.20 என மொத்தம் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

Tags:    

Similar News