உள்ளூர் செய்திகள்
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி
- விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கபட்டது
- அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம் 31-ந் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கரூர்:
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ஆம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம் 31-ந் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அரவக்குறிச்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், 2009ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பணிபுரிந்து வரும் ஆண் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் சார்பாக விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, 24 லட்சத்து 30 ஆயிரத்து 943 ரூபாயை வழங்கினர். நிதி திரட்டி நன்கொடை வழங்கிய நிகழ்ச்சி சக காவலர்கள் மற்றும் கரூர் வட்டார பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.