உள்ளூர் செய்திகள்

விதைக்கான விதிகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்-விதைச்சான்று அதிகாரி தகவல்

Published On 2023-07-05 13:10 IST   |   Update On 2023-07-05 13:10:00 IST
  • விதைக்கான விதிகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என விதைச்சான்று அதிகாரி தெரிவித்துள்ளார்
  • பயிர்களின் ஆதார நிலை விதைகளின் இனத்தூய்மை 99 சதவீதம் இருக்க வேண்டும்.

நொய்யல்,

விதைச்சான்று உதவி இயக்குநர் மணிமேகலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் விதை மூட்டைகளில் விதை உற்பத்தியாளர்கள் அட்டை, விதைசான்று துறை வழங்கிய சான்று அட்டை என இரு அட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். சான்று அட்டையில் விதையின் ரகம், நிலை, விதைச்சான்று எண், பகுப்பாய்வு நாள், காலாவதிநாள், அளவு உள்ளிட்ட விபரங்கள் இருக்கும். பயிர்களின் ஆதார நிலை விதைகளின் இனத்தூய்மை 99 சதவீதம் இருக்க வேண்டும். சான்று விதைகளின் இனத்தூய்மை 98 சதவீதம் இருக்க வேண்டும். சான்று அட்டை பொருத்திய விதைகளை பயிரிடுவதால் அதிக முளைப்புத் திறன், சீரான வளர்ச்சி, கலப்படம் இல்லாத விதைகள், ஒரே நேரத்தில் அறுவடை செய்து அதிக மகசூல் பெறலாம். எனவே விவசாயிகள் சான்று அட்டை பொருத்திய விதிகளையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News