உள்ளூர் செய்திகள்
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிரைவர் கைது
- குளித்தலை அருகே, மணல் கடத் தலில் ஈடுபட்ட டிப்பர் டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்
- லாலாபேட்டை போலீசார் டிப்பர் டிராக்டரை பறிமுதல் செய்தனர்
கரூர்,
குளித்தலை அருகே, மணல் கடத் தலில் ஈடுபட்ட டிப்பர் டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி வி.ஏ.ஓ., லிங்கேஸ்வரன் பஞ்சப்பட்டி பழைய ஒயின்ஷாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண் டிருந்தார். அப்போது வேகமாக வந்த டிப்பர் டிராக்டரை நிறுத்தி, சோதனை செய்தார். அப்போது அரசு அனுமதியில்லாமல், ஒரு யூனிட் வாரி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இது குறித்து லாலாபேட்டை போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் டிப்பர் டிராக்டரை பறிமுதல் செய்து, மேல பஞ்சப்பட்டியை சேர்ந்த டிரைவர் கருப்பையா, (40) மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.