உள்ளூர் செய்திகள்

நடையனூரில் சிதலமடைந்த நூலகம் கட்டிடம்

Published On 2023-11-09 08:33 GMT   |   Update On 2023-11-09 08:33 GMT
  • நடையனூர் பகுதியில் மிகவும் சிதலமடைந்த நிலையில் நூலகத்தால் புத்தகங்கள் பாழடைகின்றன
  • நூலகத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் நடையனூரில் அந்த பகுதி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஊர் புற நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளது. மழை நீர் தேங்கி நிற்பதால், கட்டிடத்தின் மேல் பகுதி காங்கிரீட் கீழே விழுந்து கம்பிகள் தெரிகிறது. கட்டிடமும் பழுதடைந்து வருகிறது.மழை நீர் கசிவதால் கட்டிடத்திற்குள் உள்ள நூல்கள் நனைந்து வீணாகி வருகிறது. இது குறித்து விரைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைத்து நூல்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடையனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது:-

எங்கள் பகுதியில் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நூலகத்திற்கு ஏராளமான சென்று பயனடைந்து வருகின்றனர். கஷ்டப்பட்டு பெறப்பட்டு வாங்கி வைத்துள்ள நூல்கள் மழை நீரில் நனைந்து வீணாகி வருவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு அரசு அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் புகார் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News