உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே மகள் மாயம்; தாய் போலீசில் புகார்

Published On 2023-06-24 13:21 IST   |   Update On 2023-06-24 13:21:00 IST
  • குளித்தலை அருகே மகள் மாயமானதால் தாய் போலீசில் புகார் கொடுத்தார்
  • போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

குளித்தலை அடுத்த தோகைமலை பஞ்., தெற்கு வேதாச்சலம்புரத்தை சேர்ந்தவர் ஹஜிரா பேகம். இவரது மகள் ஷகானா பானு (வயது 19). ஹஜிரா பேகம், இவருடைய கணவர் சாகுல் அமீது இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக புதுக்கோட்டை மாவட்டம் கடியாக்குறிச்சிக்கு சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் தனது மகளை காணவில்லை என தாய் ஹஜிரா பேகம் கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News