உள்ளூர் செய்திகள்

தரைக்கடைக்கு சுங்க கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

Published On 2022-10-21 13:54 IST   |   Update On 2022-10-21 13:54:00 IST
  • தரைக்கடைக்கு சுங்க கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
  • நிர்வாகம் கட்டணம் வசூல் செய்யப்படவில்லை

கரூர்

தீபாவளியை முன்னிட்டு, கரூர் நகரில் தற்காலிக தரைக்கடை அமைத்துள்ளவர் களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்தால் அதுகுறித்து, தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என, கரூர் மாநகராட்சி கமிஷனர் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கரூரில் ஜவஹர் பஜார், பசுபதீஸ்வரர் கோவில் பகுதிகள், எம்.எல்.ஏ., அலுவலக சாலை, கோவை சாலை, திண்ணப்பா கார்னர் சாலைகளில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

மேலும், ஆங்காங்கே தற்காலிகமாக தரைக்கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் ஜவுளி வகைகள், காலணிகள், அலங்கார பொருட்கள், கவரிங் நகைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தற்காலிக கடைகளில், சிலர் சுங்க கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீபாவளியை முன்னிட்டு, கரூர் மாநகராட்சி பகுதிகளில் பலர் தரை கடை அமைத்துள்ளனர். இதற்கு, மாநகராட்சி சார்பில் தரைக்கடை சுங்க வசூல் மற்றும் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யப்படவில்லை. எனவே, வெளி நபர்கள் யாரும், எந்த கட்டணம் கேட்டலும் கொடுக்க வேண்டாம். அத்துமீறி வசூலில் ஈடுபடும் நபர்கள் குறித்து, 04324-260011 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News