உள்ளூர் செய்திகள்

20 பெண்கள் மீது வழக்கு பதிவு

Published On 2023-08-19 11:51 IST   |   Update On 2023-08-19 11:51:00 IST
  • நடையனூர் அருகே மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
  • குடியிருப்பு பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்

வேலாயுதம் பாளையம், 

கரூர் மாவட்டம் நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரம் அமைப்பதை நிறுத்த கோரி அந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலாயுதம்பாளையம் -நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நெப்போலியன் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்த சித்ரா, செல்வி, தனம், சாந்தி, தேவி, ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, பேபி, சோலையம்மாள், சங்கீதா, சத்யா, ராஜேஸ்வரி, யசோதா, பத்மா, ராணி, உள்ளிட்ட சுமார் 20 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News