தென்னை சாகுபடி பயிற்சி விவசாயிகளுக்கு அழைப்பு
- தென்னை சாகுபடி பயிற்சியில் கலந்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
- வேளாண் அறிவியல் மைய தலைவர் அழைப்பு
கரூர்,
'இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் மற்றும் கரூர் மாவட்ட வேளாண் அறி வியல் மையம் சார்பில் நாளை, தென்னை சாகுபடி குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடக்கிறது' என, வேளாண் அறிவியல் மைய தலைவர் திரவியம் ஜெயராஜ் தெரி வித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டம், தோகைமலை அருகே புழுதேரியில் உள்ள, வேளாண் அறிவியல் மையத்தில் நாளை (20ல்) லாபகரமான தென்னை சாகுபடி குறித்த, ஒருநாள் பயிற்சி அளிக் கப்படுகிறது. அதில், தென்னை நாற் றங்கால் தொழில்நுட்பம், பிஞ்சு உதிர் வதை தடுத்தல், ஒருங்கிணைந்த உரம், நீர்மேலாண்மை, பூச்சிநோய் மேலாண்மை மற்றும் கூட்டு பொருட்கள் தயாரித்தல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப் படும். பயிற்சியில் பங்கேற்க விருப் பமுள்ள விவசாயிகள், 95665-20813, 86678-82566 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.