உள்ளூர் செய்திகள்

கொத்தடிமைகள் - வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து திடீர் ஆய்வு

Published On 2023-10-30 10:17 IST   |   Update On 2023-10-30 10:17:00 IST
  • கரூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமைகள் - வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து திடீர் ஆய்வு
  • கொத்தடிமை தொழிலாளர் முறை பற்றிய புகார்களை தெரிவிக்க அழைப்பு

கரூர்,

கரூர் மாவட்டம் சணப் பிரட்டி, புலியூர் மற்றும் ஓடமுடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமைகள் குறித்து திடீர் ஆய்வு நடைபெற்றது. கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் தலைமையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்கக துணை இயக்குநர் பூவிதா, குளித்தலை ஆர்டிஓ அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் துரை, கரூர் எஸ்எஸ்ஐ ராஜேஸ்வரி, உதவி ஆய்வாளர்கள் சரவணக்குமரன், குமரக்கண்ணன் மற்றும் குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

அந்த கூட்டாய்வில், கொத்தடிமை தொழிலாளர்கள் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என தெரியவந்தது. மேலும், ஆய்வின் போது, வெளி மாநில தொழிலாளர்களின் முழு விபரங்களைப் வலைதளத் தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வெளிமாநில தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறை பற்றிய புகார்களை தெரிவிக்க 1800 4252650 என்ற எண்ணிலோ அல்லது சுருக்க கோடு எண்ணான 155214 என்ற எண் ணிலோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News