உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவிகள் 3 பேருக்கு மது வாங்கி கொடுத்தவர் கைது

Published On 2022-08-13 14:27 IST   |   Update On 2022-08-13 14:27:00 IST
  • பள்ளி மாணவிகள் 3 பேருக்கு மது வாங்கி கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்
  • மிரட்டி அதனைஅருந்த வைத்துள்ளார்.

கரூர்

கரூர் பசுபதிபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மகன் தினேஷ் என்கிற தீனா (22). பெயிண்டர். கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுபதிபாளையம் தரணி நகரை சேர்ந்த மாணவி 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10ம் தேதி அம்மாணவியையும் அவரது தோழிகள் இருவரையும் தினேஷ் மதிய உணவு அருந்த வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அம்மாணவியையும், அவரது தோழிகள் 2 பேருக்கும் மது வாங்கி கொடுத்து, மிரட்டி அதனைஅருந்த வைத்துள்ளார்.

இதில் மது அருந்திய 3 பேரில் ஒரு மாணவி வீட்டுக்கு சென்றுவிட, 2 மாணவிகள் பள்ளி சீருடையில் சர்ச் முனை பகுதியில் மயங்கி நிலையில் இருந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 2 மாணவிகளையும் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்.

போலீஸார் மாணவிகளிடம் விசாரணை நடத்தி, அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில். இதுதொடர்பாக அம்மாணவியின் தாய் பசுபதிபாளையம் போலீஸில் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் தினேஷ் மீது மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News