உள்ளூர் செய்திகள்

தொழில்நுட்ப எழுச்சி இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளது

Published On 2023-08-31 11:55 IST   |   Update On 2023-08-31 11:55:00 IST
  • தொழில்நுட்ப எழுச்சி இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்
  • கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் பேட்டி

வேலாயுதம்பாளையம்

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் தலைவர் ம.குமாரசாமி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லூரியின் செயலாளர் ராமகிருஷ்ணன், செயல் இயக்குனர் குப்புசாமி மற்றும் கல்லூரியின் முதல்வர்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரியின் மாணவர் சேர்க்கை குழும தலைவர்சுந்தரராஜூ வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், கூறும்போது,

நிலவில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவிற்கான தனி முத்திரை கொடுத்ததை தாண்டி, இந்தியாவும் அடுத்தக்கட்ட பணிகளுக்கான ஒரு சிறப்பான இடத்தை கொடுக்கும்.

நிலவு சார்ந்த ஆய்வுகளில் வெப்பமயமாதலுக்கு பதிலாக நிலவில் இருந்து சில பொருட்கள் கொண்டு வரமுடியும் என நினைக்கிறேன். இதனால் அடுத்துவரும் காலக்கட்டத்தில் வெப்பமயமாதல் இல்லாத ஒரு எரிபொருளை உருவாக்குவதில் இந்தியா முதலிடம் வகிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். அமெரிக்காவில் ஏற்பட்டது போன்ற ஒரு அறிவியல் தொழில்நுட்ப எழுச்சி இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளது. . மனிதனின் அடுத்தக்கட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கும், பூமிக்கும் ஒருபாலமாக நிலவு அமையும். அதில் முன்னணி இடத்தில் இந்தியா இருப்பதற்கான வாய்ப்பை சந்திராயன்-3 காட்டி இருக்கிறது. நிலவில் ஆக்சிஜன் உருவாக்க முடியும், அதை எப்படி சேமிப்பது என பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News