உள்ளூர் செய்திகள்
மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு கிணற்றுக்குள் விழுந்தது
- கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
- மீட்கப்பட்ட பசு மாட்டிற்கு அரசு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (45).அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் அவருக்கு சொந்தமான பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பசு மாடு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து கிணற்றுக்குள் தத்தளித்த பசுமாட்டை கயிற்றால் கட்டி மீட்டனர்.
60 அடி ஆழ கிணற்றில் பசுமாடு விழுந்ததால், நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் உஷாவும் வரவழைக்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட பசு மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்தார்.