உள்ளூர் செய்திகள்

மது விற்ற 8 பேர் கைது

Published On 2023-02-20 15:04 IST   |   Update On 2023-02-20 15:04:00 IST
மதுபாட்டில்கள், கள் பறிமுதல்

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, சட்டம் - ஒழுங்கு போலீசார், வாங்கல், தென்னிலை, அரவக்குறிச்சி, தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக, ராஜசேகரன் (வயது 35), செல்வி (49), பொன்னுசாமி (71), கள் விற்றதாக சுப்பிரமணி (66), சேர்மன் துரை (29), பழனியப்பன் (62) பாலசுப்பிரமணி (47), கேசவன் (37) ஆகிய, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 71 மதுபாட்டில்களும், 15 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News