உள்ளூர் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது
- சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
கரூர்:
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சப் இன்ஸ்பெக்டர் அழகுராம் மற்றும் போலீசார் வாங்கல், வெள்ளியணை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மது பானங்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக பெரியக்காள், (வயது65), மகேந்திரன் (65), கருப்பையா (48), செந்தில் (35), செல்வி (45) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 234 மதுபான பாட்டில்கள் பறி முதல் செய்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.