உள்ளூர் செய்திகள்

கற்போருக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கிய போது எடுத்தபடம்.

செங்கோட்டையில் கற்போர் மையம் தொடக்கம்

Published On 2022-12-28 08:23 GMT   |   Update On 2022-12-28 08:23 GMT
  • தென்காசி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட கற்போர் கண்டறியப்பட்டு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது.
  • மாவட்டத்தில் 9,476 பேர் கண்டறியப்பட்டு அதில் 491 கற்போர் மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் ஏராளமான, முற்றிலும் எழுத படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட கற்போர் கண்டறியப்பட்டு அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 9,476 கற்போர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள னர். அவர்கள் 491 கற்போர் மையங்களில் சேர்க்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் தங்கள் பெயரை தாங்களே எழுதவும், அடிப்படை சொற்களை வாசிக்கவும் மற்றும் வாழ்க்கை கணக்குகள் செய்யவும் கற்று வருகின்றனர். அதன் அடிப்படையில் செங்கோட்டை வட்டார வள மையத்தை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி அனந்த புரத்தில் கற்போர் மையம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகலட்சுமி, மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, தொடங்கி வைத்து கற்போருக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கினர். தன்னார்வலர் முத்துமாரி கற்போருக்கு அடிப்படைக் கல்வி வழங்கினார்.

Tags:    

Similar News