உள்ளூர் செய்திகள்
குன்னூர் பள்ளியில் கராத்தே போட்டி
- ஜூனியர்களுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அருவங்காடு,
குன்னூர் புனித ஜோசப் கான்வென்ட் பள்ளியில் கராத்தே போட்டி நடைபெற்றது. ராஜேந்திரன் சஞ்சய் தலைமை வகித்தார். மூர்த்தி சஞ்சய், சுப்பிரமணி சஞ்சய் முன்னிலை வகித்தனர்.
ஜூனியர்களுக்கான போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பிளாக்பெல்ட் பிரசுதா, பிரியன், ரித்திக், கிருஷ்ணபிரியா, சாய்மணி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். அடுத்த மாதம் 20-ந்தேதி மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெறும் என மாஸ்டர் ராஜேந்திரன் தெரிவித்தார்.