உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Update: 2023-06-02 12:38 GMT
  • இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.
  • வேலை பிடிக்கவில்லை என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் பிபின் ராஜ் (வயது 21). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிபின்ராஜ், தான் பார்க்கும் வேலை பிடிக்கவில்லை என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பிபின் ராஜை பெற்றோர் சமதானம் செய்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அப்போது வீட்டு மேல் மாடி அறைக்கு சென்ற பிபின் ராஜ் அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News