உள்ளூர் செய்திகள்

9-ம் நாள் திருவிழாவில் வெள்ளி கலைமான் வாகனத்தில்பகவதி அம்மன் வீதி உலா

Update: 2023-06-02 11:32 GMT
  • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

9-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பார்வதிகாரர் குடும்பத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மனை எழுந்தருள செய்து மேளதாளம் முழங்க சன்னதி தெரு வழியாக தெற்குரத வீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் விசேஷ பூஜை களும், அலங்கார தீபாராத னையும் நடந்தது. இதில் மண்டகப்படி கட்டளைதாரர்கள் ஹரிகரன், சிவசுப்பிரமணியன் விஜய் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும் அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பக்தி பஜனை யும் நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரதவீதி, சன்னதிதெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

Tags:    

Similar News