தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
- தாயார் திட்டியதால் விபரீத முடிவு
- தங்கள் குல தெய்வம் கோவில் பகுதிக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள கீழ கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரதீப்குமார் (வயது 24). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மரம் ஏறும் தொழிலுக்கு சென்று வந்தார்.
ஆனால் பிரதீப்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் அவருக்கு மது பழக்கமும் இருந்துள்ளது. இதனை தாயார் லீலா கண்டித்துள்ளார்.
நேற்று இரவு பிரதீப்கு மார் வீட்டிற்கு வந்து உணவருந்தினார். அப்போதும் வேலைக்குச் செல்லாதது பற்றி தாயார் கேட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர், அந்தப் பகுதியில் உள்ள தங்கள் குல தெய்வம் கோவில் பகுதிக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இன்று காலை அந்தப் பக்கம் சென்றவர்கள், அங்குள்ள மரத்தில் பிரதீப்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்துள்ளனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். இதற்கிடையில் தக்கலை போலீசாரும் அங்கு வந்தனர்.
அப்போது பிரதீப்குமார் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதீப்குமாரின் தாயார் லீலா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.