உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

விவேக் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும்

Published On 2022-11-20 13:44 IST   |   Update On 2022-11-20 13:44:00 IST
  • தெற்கு ரெயில்வே தகவல்
  • டிசம்பர் 1-ந் தேதி சென்னை எழும்பூர் - குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு தாமதமாக ஓடும்.

நாகர்கோவில்:

தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திப்ருகர் மற்றும் கன்னியாகுமரி இடையே வாராந்திர விவேக் எக்ஸ்பி ரஸ் இயக்கப்படும் சேவைகள் அதிகரிக்கப்படும். பயணிகளின் வசதிக்காக, இந்த ரெயில் வாரம் இரு முறை, அதாவது இருவார விரைவு ரெயிலாக இயக் கப்படும்.

ரெயில் எண்: 15906 திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் இருவார விரைவு ரெயில் திப்ருகரில் இருந்து சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படும். நவம்பர் 22 முதல் அமலுக்கு வரும்.

ரெயில் எண் 15905 கன்னியாகுமரி - திப்ருகர் விவேக் இருவார விரைவு ரெயில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். நவம்பர் 27 முதல் அமலுக்கு வரும்.

பெட்டிகள் எண்ணிக்கை, நிறுத்தங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காயங்குளம் சந்திப்பு, திருப்பணித்துறை- எர்ணாகுளம், சேர்த்தல-மராரிகுளம் மற்றும் இடப்பள்ளி- களமசேரி பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக டிசம்பர் 1-ந் தேதி அன்று சென்னை எழும் பூரில் இருந்து புறப்படும் ரெயில் எண்: 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு தாமதமாக ஓடும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News