உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்க முயன்றதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ - மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம் - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

Published On 2022-09-29 15:07 IST   |   Update On 2022-09-29 15:07:00 IST
  • சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது
  • சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

நாகர்கோவில் :

மண்டைக்காடு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் முரளிதரன்.

இவர் நடுவூர் கரையில் புகார் மனு ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரனிடம் அத்துமீறி பேசியதாக தெரிகிறது.

இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் திடீரென இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்துள்ளார்.

மண்டைக்காடு போலீஸ் நிலையத்திலிருந்து சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News