மத்திய மந்திரி பிரதீமா பவுமிக் கன்னியாகுமரி வருகை - விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டார்
- பகவதி அம்மனின் ஒற்றைக்கால் பாதத்தை பார்த்து வணங்கினார்.
- மத்திய மந்திரி விவேகானந்தர் பாறையில் இருந்தவாரே திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டார்.
கன்னியாகுமரி :
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி பிரதீமா பவுமிக் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வந்தார். அவர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுமூலம் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு, மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்துக்கு சென்றார். அங்கு பாறையில் இயற்கையாகவே பதிந்திருந்த பகவதி அம்மனின் ஒற்றைக்கால் பாதத்தை பார்த்து வணங்கினார்.அதன்பிறகு அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்வையிட்டார். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும் இடையே கண்ணாடி கூண்டு இழை யினால் ஆன இணைப்பு பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவ தால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து நடக்க வில்லை. இதனால் மத்திய மந்திரி விவேகானந்தர் பாறையில் இருந்தவாரே திரு வள்ளுவர் சிலையையும் பார்வை யிட்டார்.
அதன்பிறகு அவர் மீண்டும் அதே படகில் கரைக்கு திரும்பினார். மத்திய மந்திரி வருகையை யொட்டி கன்னியா குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.