உள்ளூர் செய்திகள்

தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

Published On 2023-09-12 08:57 GMT   |   Update On 2023-09-12 08:57 GMT
  • போதகர் நெல்சன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் ஸ்பென்சர் பிரதாப் சிங் வரவேற்றார்.
  • பேராசிரியர்கள். பணியாளர்கள். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் :

தோவாளை சி. எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங் கலை மற்றும் முதுகலை பொறியியல், எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. போதகர் நெல்சன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் ஸ்பென்சர் பிரதாப் சிங் வரவேற்றார். தாளாளர் எபனேசர் ஜோசப் தலைமை தாங்கினார்.

கல்லூரியின் தலைவர் குமரிப் பேராயர் செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை, உண்மை மற்றும் நன்றியுணர்வோடு வாழ்ந்து உலகில் சாதனை யாளர்களாக மாற வேண்டும் என்றார்.

குமரிப் பேராய நலிவுற்றோர் வளர்ச்சித் துறையின் இயக்குனர் லாரன்ஸ், கல்லூரியின் காசாளர் பொன். சாலமோன், மாணவிகள் பிரெய்சலி, அகுள் மேரி ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி வரவேற்றனர். முதுநிலை வணிக நிர்வாகத்துறை தலைவர் நாக்ஸன் நன்றி கூறினார். இந்த விழாவில் கல்லூரியின் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள். பணியாளர்கள். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News