உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையின மக்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது

Published On 2023-07-23 12:51 IST   |   Update On 2023-07-23 12:51:00 IST
  • தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
  • தி.மு.க., காமராஜருக்கு விரோதி போல ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளார்.

நாகர்கோவில் :

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்றது. தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்று பேசினார். மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, வேல்முருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோதங்கராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்ட னர். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

குமரி மாவட்டம் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட மாவட்டமாகும். ஏனென்று சொன்னால் தி.மு.க.வின் வரலாறை குறிப்பாக கலைஞருடைய வரலாறை முழுமையாக தெரிந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்த பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசை அவதூறாக பேசியுள்ளார். பல பொய்யான தகவல்களையும் கட்ட விழ்த்துள்ளார்.

தி.மு.க., காமராஜருக்கு விரோதி போல ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளார். காமராஜருக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள உறவும், முன்புள்ள வரலாறும் தெரிய மால் அண்ணாமலை உளறி விட்டு சென்றுள்ளார்.

காமராஜரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியது தி.மு.க. தான். 1961-ல் முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது தி.மு.க. என்பதை அண்ணாமலை மறந்து விடக்கூடாது. ராமர் கோவில் வைத்து வடக்கே அரசியல் செய்வது போல், இங்கு காமராஜரை வைத்து அரசியல் செய்ய பாரதிய ஜனதா நினைக்கிறது. காமராஜருக்கு பதவி ஆசை இருப்பது போன்று நாகர்கோவிலில் அண்ணாமலை சித்தரித்து பேசி உள்ளார்.

காமராஜரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போது, தனது முதல்-அமைச்சர் பதவியை தூக்கி எறிய முன்வந்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் தமிழ் மண்ணுக் காக போராடிய காமராஜர் பெயரை சென்னை விமான நிலையத்திற்கு வைத்துக்காட்டியது தி.மு.க.வாகும்.

நாகர்கோவிலை நகராட்சி யில் இருந்து மாநகராட்சியாக மாற்ற பலரும் ஆசைப்பட்டார் கள். ஆனால் அதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி காட்டினார்.

மக்களின் உணர்வுகளை மதிக்கும் கட்சி நாட்டில் ஆட்சி அமைப்பது நிச்சயம். அப்படி பார்க்கும்போது மணிப்பூரில் நடத்த கொடூரங்களை பார்த்தால் பாரதிய ஜனதா அரசு ஒரு கையாலாகத அரசு என தெரிகிறது. இதன்மூலம் சிறுபான்மையினர் மக்க ளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவா கியுள்ளது.

செந்தில் பாலாஜி மீது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட வழக்கிற்கு இப்போது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?. ஓட்டுக்கு காசு கொடுப்பவர் களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வேட்பாளர்களையே பணம் கொடுத்து வாங்கும் கட்சி பா.ஜ.க. தான். தமிழகத்தில் 40-க்கு 40 என நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தலைமை கழக வக்கீல் சூர்யா வெற்றி கொண்டான், மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நிர்வாகிகள் நசரேத் பசலியான், தில்லை செல்வம், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ். பார்த்த சாரதி, அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன், பிரபா ராம கிருஷ்ணன், இ.என். சங்கர், துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வன், மதியழகன், சுரேந்திர குமார், பிராங்கிளின், லிவிங்ஸ்டன் மற்றும் வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மண்டல தலைவர் ஜவகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News