உள்ளூர் செய்திகள்
தோவாளையில் ரூ.55 ஆயிரம் திருட்டு
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நாகர்கோவில் :
தோவாளை நியூ சிட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31), பூ வியாபாரி.
இவர் சம்பவத்தன்று நாகர்கோவில் மகளிர் கல்லூரி சாலையில் பூ விற்பனை செய்த ரூ.55 ஆயிரம் பணத்தை தனது ஆட்டோவில் முன்பகுதியில் வாங்கி வைத்திருந்தார்.
பின்னர் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது ஆட்டோ வில் இருந்த பணம் திருடப்ப ட்டிருந்தது.
இதுகுறித்து மணிகண்டன் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.